Tamil Entertainment

கருணாஸின் கார் மீது தாக்குதல்

karunas-mla-car-attacked


karunas-mla-car-attacked
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சட்டமன்ற உறுப்பினர் கருணாஸின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனுடைய 302வது பிறந்தநாளையொட்டி, நெற்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான
கருணாஸ் அங்கு மரியாதை செலுத்துவதற்காகச் சென்றிருந்தார். சிலைக்கு மாலை அணிவித்து விட்டு திரும்பிய போது அவரது காரை அடையாளம் தெரியாத நபர்கள் சூழ்ந்து கொண்டு கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். லேசான தடியடி நடத்தி அங்கிருந்த
கூட்டத்தை கலைத்த போலீசார், கருணாஸை பத்திரமாக அழைத்துச் சென்றனர். தாக்குதல் தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

Courtesy : puthiyathalaimurai

மாணவி அனிதா மரணத்திற்கு ரஜினிகாந்த் இரங்கல்

rajinikanth-s-mourning-for-student-s-death

மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,‘தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்: அனிதாவுக்கு நடந்தவை துரதிஷ்டவசமானவை’ எனத் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராட்டம் நடத்திய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
courtesy : puthiyathalaimurai

நயன்தாரா முதல் அனுஷ்கா வரை... யார் யாரிடம் என்ன கார்? அதில் என்ன ஸ்பெஷல்?

ஓர் இடத்துக்குப் போக, வர எவ்வளவு யூஸ்ஃபுல்லா இருக்கு’ என்பதைத் தாண்டி, கார் வைத்திருப்பது என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகிவிட்டது. நீங்கள் பயன்படுத்தும் காரை வைத்தே உங்கள் செல்வாக்கைத் தெரிந்து கொள்ளலாம். காமன் மேன்களுக்கே இப்படி என்றால், சினிமா வுமன்களுக்குக் கார் என்பது கெத்து. சினிமா பிரபலங்கள் கார் வைத்திருப்பதிலும் ராசி பார்ப்பார்கள். பிஎம்டபிள்யூ, ஆடி கார்களுக்குத்தான் சினிமாவில் மவுசு. பாலா, மாதவன், சிவக்குமார் என்று பென்ஸ் கார் வைத்திருக்கும் சினிமா பிரபலங்கள் ரொம்ப சொற்பம். நடிகர்கள் ஓகே! நடிகைகள் எப்படி? கோலிவுட் முதல் பாலிவுட் வரை, நடிகைகளின் கார் கலெக்ஷன் இது.
அனுஷ்கா
குந்தலதேசத்து யுவராணி ‘தேவசேனா’, எளிமைக்கு எடுத்துக்காட்டு. கர்நாடகத்தைச் சேர்ந்த அனுஷ்கா ஷெட்டி, ஆரம்பத்தில் காரே அனுஷ்காஇல்லாமல்தான் இருந்தாராம். யோகா ஆசிரியராக இருந்தபோது, வாடகை கார்களில்தான் பயணிப்பாராம். தயாரிப்புத் தரப்பில் வரும் கார்களில்தான் ஷூட்டிங்கே போவார். ‘எவ்வளவு பெரிய நடிகை; சொந்தமா கார் இல்லேனா எப்படி?’ என்ற குடும்பத்தினரின் ஆதங்கத்தின்படி, முதன் முதலாக 1.5 கோடி ரூபாய்க்கு ஜாகுவார் XJ மாடல் காரை வாங்கினார். இதை செலெக்ட் செய்தது அனுஷ்காவின் அண்ணன். அதற்கப்புறம் விழாக்களுக்குச் செல்வதற்கு ஒரு பிஎம்டபிள்யூ X5 காரும் பயன்படுத்தி வருகிறார். இந்தக் காரின் விலை சுமார் 70 லட்சம். ஷூட்டிங்குக்கு இப்போது ஜாகுவார்தான் அனுஷ்காவின் சாய்ஸ்.
நயன்தாரா
‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவுக்கு, ரொம்பப் பிடித்த விஷயம் கார். அதிலும் பிஎம்டபிள்யூதான் அவரின் ஃபேவரைட். X3, X5, 7 சீரிஸ் என்று பிஎம்டபிள்யூ கார்கள்தான் நயனின் கராஜில் வரிசை கட்டி நிற்கின்றன. கார் பயணங்கள் என்றால் நயனுக்கு உயிர். சென்னையிலிருந்து கேரளாவுக்கு பிஎம்டபிள்யூ X3 காரை தானாகவே ஓட்டிச் சென்றுவிடுவாராம். இப்போது ‘நீயாலாம் கார் ஓட்டக் கூடாது’ என்று பாசமானவர்களின் அன்புக் கட்டளைக்குப் பிறகு, டிரைவர் வைத்துப் பயணிக்க ஆரம்பித்து விட்டார். நயனுக்கு கறுப்பு என்றால் இஷ்டம். அதனால், நயனின் பிஎம்டபிள்யூ கார்கள் எல்லாமே கறுப்புக் கலரில் ஜொலிக்கின்றன.
ஸ்ருதிஹாசன்

கார்

அப்பா மாதிரியே ‘ரஃப் அண்ட் டைப்’ கார்கள்தான் ஸ்ருதியின் ஃபேவரைட். தடாலடி காரான லேண்ட் க்ரூஸர் பயன்படுத்தி வந்த கமல்ஹாசன், இப்போதுதான் மென்மையான ஆடி A8-க்கு மாறியிருக்கிறார். ஸ்ருதிக்கு எப்போதுமே எஸ்யூவி கார்கள் மீதுதான் கண். இந்தியாவில் சாஃப்ட் ரோடராகவும் ஆஃப் ரோடராகவும் பட்டையைக் கிளப்பும் கார், ரேஞ்ச்ரோவர் மாடல்தான். இந்த எஸ்யூவியின் விலை 1.5 கோடி. இதை ஹைவேஸுக்கும் கரடுமுரடு சாலைகளுக்கும் ஏற்றபடி ஏர் சஸ்பென்ஷனை மாற்றி, காரின் உயரத்தை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம் என்பது ஸ்பெஷல். வீல் பேஸ் அதிகம் கொண்ட இந்த மாடலை விரட்டுவதில் ஸ்ருதிக்கு அலாதி பிரியம்.
த்ரிஷா
தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி 18 வருடங்கள் ஆனாலும், இன்னும் டீன் ஏஜைத் தாண்டாத த்ரிஷாவும் பிஎம்டபிள்யூ ரசிகைதான். ஆரம்பத்தில் இனோவா மற்றும் டொயோட்டா கேம்ரி கார்கள் பயன்படுத்தி வந்த த்ரிஷா, நயன்தாராவைப் பார்த்துத்தான் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் வாங்கியதாகச் சொல்கிறார்கள். ‘கேம்ரி கார் வெறும் 3 கி.மீ கூட மைலேஜ் தரமாட்டேங்குது; அதான் பிஎம்டபிள்யூவுக்கு மாறினேன்’ என்று ஒரு தடவை சொன்னார் த்ரிஷா. இது தவிர இன்னும் 2 கார்கள் த்ரிஷா வசம் உள்ளன. 
சமந்தா

சமந்தா

சமந்தாவும் சாட்சாத் பிஎம்டபிள்யூ ஃபேன்தான். தெலுங்கிலும் தமிழிலும் கலந்து கட்டி அடிக்கும் சமந்தாவிடம் இருப்பது பிஎம்டபிள்யூ X5 கார். எஸ்யூவியான இதன் விலை கிட்டத்தட்ட 80 லட்சம் ரூபாய். கறுப்புதான் சமந்தாவுக்கும் ஃபேவரைட். ‘சமந்தாவும் நயனுக்குப் போட்டியாக பிஎம்டபிள்யூ கார் வாங்கினார்’ என்று ஒரு செய்தி வர, ‘நயன் வைத்திருப்பது 5 சீரிஸ்; என்னிடம் இருப்பது X5' என்று பதிலடி கொடுத்தார். இதற்காகவே 70 லட்ச ரூபாய்க்கு ஜாகுவார் XF கார் ஒன்று வாங்கி தனது கராஜில் பார்க் செய்தார் சமந்தா. இப்போது லேட்டஸ்ட்டாக தன் கணவருக்கு பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரும், MV அகுஸ்டா பைக்கும் பரிசளித்து ‘சமத்து மனைவியாக’ கணவரைக் காதலித்து வருகிறார் சமந்தா.
அசின்

அசின்
மைக்ரோமேக்ஸ் அதிபரான அசினுக்குப் பிடித்தது ஆடி கார்கள். எஸ்யூவி ரகம்தான் அசினின் ஃபேவரைட். MH பதிவு எண் கொண்ட கறுப்பு நிற ஆடி Q7 எஸ்யூவி காரில்தான் அசினின் மும்பைப் பயணம் முழுதும். ஆனால், அசினின் கணவர் ராகுல் ஷர்மா செடான் பிரியர்.
காஜல் அகர்வால்
கார் கலெக்ஷனில் எல்லாம் காஜலுக்கு இன்ட்ரஸ்ட் இல்லை. ஆரம்பத்தில் அண்ணனின் காரில்தான் முழுப் பயணமும். இப்போது காஜலிடம் ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ என கறுப்பு நிற பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் மட்டும்தான் இருக்கிறது. இதன் விலை கிட்டத்தட்ட 80 லட்ச ரூபாய்.
ஹன்ஸிகா மோத்வானி

ஹன்சிகா
இந்தப் புதுவருடத் துவக்கத்தில்தான் ஹன்ஸிகா, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் வாங்கினார். நேவி புளூ கலரில் உள்ள இந்த பிஎம்டபிள்யூ காரை டெலிவரி எடுத்த முதல் நாளே தன் குடும்பத்தினரை ஏற்றிக்கொண்டு ஜாலி ரைடு போய்விட்டு வந்து ட்விட்டரில் பதிவிட்டதற்கு எக்கச்சக்க ரீ-ட்வீட்டுகளும் லைக்குகளும் குவிந்து விட்டன. ஹன்ஸிகாவின் ராசி எண் 9. அவரின் பிறந்த தேதி 9; புதிதாக அவர் வாங்கிய ஃப்ளாட்டின் கதவு எண் 9. இப்போது தனது காருக்கும் 9-லேயே ஃபேன்ஸி நம்பர் கிடைத்ததில் ஹன்ஸிகா ஹேப்பி அண்ணாச்சிகளே! பிஎம்டபிள்யூ 9 சீரிஸ் வந்தா வாங்கிப் போடுங்க அம்மணி!
ஆண்ட்ரியா
ஆண்ட்ரியாவுக்கு கார் எந்தளவு பிடிக்கும் என்றால், கார் கம்பெனிகள் அழைப்பு விடுத்தால் முதல் ஆளாகக் கலந்துகொள்ளும் அளவுக்கு கார்கள் மேல் லவ். ஆடி Q3 காரை இந்தியாவில் அன்வெய்ல் பண்ணியதே ஆண்ட்ரியாதான். வின்டேஜ் கார் ராலி நடந்தாலும் கொடியசைத்துத் துவக்கி வைக்க ஆஜராவது ஆண்ட்ரியாவின் ஹாபி. இந்தப் ‘பச்சைக்கிளி முத்துச்சரத்துக்குப்’ பிடித்தது பிஎம்டபிள்யூ. 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ X1 காரில் இப்போது வலம் வருகிறார் ஆண்ட்ரியா. 
ரித்திகா சிங்
ரித்திகா சிங்கிடம் இப்போதைக்குக் கார் இல்லை. தயாரிப்பு தரப்பு வாடகை காரில்தான் ரித்திகாவின் பயணம். சொந்த ஊருக்குப் பயணம் என்றால் விமானம். மும்பையில் லோக்கல் பயணம் என்றால் அப்பாவின் கார். ஆனால், தனக்கு ஆடி கார்கள் மீதுதான் கண் இருப்பதாக அடிக்கடி சொல்வார் ரித்திகா. ‘சிவலிங்கா’ படப்பிடிப்பின்போது ராகவா லாரன்ஸின் ஆடி Q7 காரை இரவல் கேட்டு வாங்கிப் பயணித்தாராம் ரித்திகா சிங். அந்தளவு ஆடி வெறியை! 
நஸ்ரியா நசீம்

நஸ்ரியா

கார் என்றால் நஸ்ரியாவுக்குக் கொள்ளைப் பிரியம். தனது கார் மீது வெயில் அடித்தாலே நஸ்ரியாவால் தாங்க முடியாத அளவுக்குக் கார்களின் மீது பாசம் கொண்டவர். திருவனந்தபுரத்தில் ஒரு சின்ன மோதலில் தனது ரேஞ்ச்ரோவர் இவோக் காரின் பெயின்ட் உரிந்ததற்கே, அதற்குக் காரணமான வேறொரு கார் டிரைவரை நடுரோட்டில் இறங்கி ‘லெஃப்ட் அண்ட் ரைட்’ வாங்கிவிட்டார். அதற்குப் பிறகு மறுபடியும் ஒரு குட்டி ஆக்ஸிடென்ட். ‘உனக்கு ரேஞ்ச்ரோவர் ராசி இல்லை செல்லம்’ என்று பென்ஸ் C க்ளாஸ் காரை வாங்கிப் பரிசளித்திருக்கிறார் அவரது கணவர் ஃபஹத் ஃபாசில். இதிலாவது கோடு விழாம ஓட்டணும்!
ஸ்ரீதிவ்யா

ஶ்ரீதிவ்யா

சொன்னா நம்பணும்! நயன்தாராவின் வெறித்தனமான ரசிகை ஸ்ரீதிவ்யா. நயன் பண்ணுவதை அப்படியே ஃபாலோ பண்ணும் ரசிகைகளில் ஸ்ரீதிவ்யாவுக்குத்தான் முதலிடம். ‘காஷ்மோரா’ பட ரிலீஸின்போது, தனது தலைவி வைத்திருப்பதுபோல் கறுப்பு நிற பிஎம்டபிள்யூ காரை வாங்கி, அவரிடமே ஆசீர்வாதமும் வாங்கிவிட்டாராம். ஹைதராபாத்தில் நடந்த ஒரு பிரஸ்மீட்டில், தனது பிஎம்டபிள்யூவைக் காட்டி ‘நயன்தாராவின் ஆசி தனக்கு எப்போதும் வேண்டும்’ என்று நெக்குருகவும் செய்தார். 
தமன்னா

தமன்னா

தமிழில் கலக்கினாலும் மும்பையில்தான் தமன்னாவைச் சந்திக்க முடியும். அதனால் MH ரிஜிஸ்ட்ரேஷனில்தான் தனது கார்களையும் பதிவு செய்திருக்கிறார். முன்பு அப்பாவின் மிட்சுபிஷி அவுட்லேண்டரில்தான் பயணம். இப்போது ஷூட்டிங், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு தமன்னாவின் ஆடி A6தான் பறக்கும். கிட்டத்தட்ட 90 லட்சம் மதிப்புள்ள A6 கார் தவிர்த்து, 20 லட்ச ரூபாய் மதிப்பில் மஹிந்திரா XUV5OO காரும் தமன்னாவிடம் இருக்கிறது.
நிக்கி கல்ராணி

நிக்கி
‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’ லக்கி கேர்ள் நிக்கி. ஆம்! பரம்பரைப் பணக்காரப் பொண்ணு நிக்கியின் கராஜில் பிஎம்டபிள்யூ, ஹோண்டா சிவிக் என்று ரக ரகமாக 5 கார்கள் இருக்கின்றன. ‘சொந்த காசில் ஆடி வாங்கணும்’ என்ற சபதத்தைப் போன வருடமே நிறைவேற்றிவிட்டார் நிக்கி. புதிதாக 90 லட்சத்துக்கு ஆடி A6 கார் வாங்கிவிட்டார். டிரைவர் இருந்தாலும், செல்ஃப் டிரைவிங்தான் நிக்கியின் சாய்ஸ்! 
அஞ்சலி

அஞ்சலி
அஞ்சலி விஷயத்தில், சித்தியில் இருந்து கார் வரை எல்லாமே சீக்ரெட்தான். ‘சிங்கம் 2’ குத்துப்பாட்டு ரிலீஸுக்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளுக்கு கறுப்பு நிற பிஎம்டபிள்யூவில் வந்திறங்கி ஷாக் கொடுத்தார். புதுசா வாங்கினதா? யாராவது கிஃப்ட் பண்ணினதா என்று ‘எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’ ரேஞ்சில் சமூகப் போராளிகள் மண்டையைக் குடைந்து கொண்டிருக்க, கூலாக அந்த காருக்கு முன்பு எடுத்த போட்டோவைப் போட்டு நெட்டில் வைரல் ஆக்கிவிட்டது அஞ்சலிப் பாப்பா. யாருக்காவது உண்மை தெரிஞ்சா சொல்லிடுங்கப்பா!

#ஃபேஸ்புக் கோடிங் எழுத மார்க்குக்கு எவ்வளவு நேரம் ஆனது தெரியுமா?

மார்க்

மார்க் சக்கர்பெர்க் தனது ஃபேஸ்புக் வாலில் எழுதும் எல்லாமே வைரல்தான். நேற்று அவர் பதிவு செய்த இரண்டு பதிவுகளும் 14 ஆண்டுகால ஃபேஸ்புக் பயணத்தை நினைவு கூறும் விதமாக அமைந்தது. இயர் ஆஃப் ட்ராவலுக்கு நடுவே கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்துக்குள் சென்ற அவர், ஹார்வர்ட் நினைவுகளை மனைவி பிரிசில்லாவுடன் ஃபேஸ்புக் லைவ் மூலம் பகிர்ந்து கொண்டார்.
“H33... இந்த அறைக்குள் நாம் இப்போது செல்ல இருக்கிறோம். 13 வருடங்களுக்கு முன்னர், இங்கு தான் நான் கல்லூரியில் படிக்கும் போது தங்கியிருந்தேன். அதன் பிறகு இப்போது தான் முதல் முறையாக இங்கு திரும்ப வருகிறேன்” எனக் கூற, பிரிசில்லா அதனை சரி செய்து 14 ஆண்டுகள் என்கிறார். ஆனால் மார்க் ”வருடத்தை அதிகரித்து சொல்லாதே 13 வருடங்கள்தான்” என காமெடியுடன் ஆரம்பிக்கிறார். 
”இங்கு கல்லூரி படிக்கும் காலத்தில் மேலும் இரண்டு மாணவர்களுடன் இணைந்து இந்த அறையில் தங்கியிருந்தேன். நான் இருந்தபோது இருந்த இந்த அறைக்கும், தற்போது உள்ள அறைக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம் இருக்கிறது. மற்றபடி எதுவுமே மாறவில்லை. அப்படியேதான் இருக்கிறது.
கதவைத் திறந்து உள்ளே சென்றால், உங்கள் கண்ணில் முதலில் படுவது இந்த டெஸ்க் தான். இந்த டெஸ்க்கின் மேலே உள்ள புகைப்படம் நான் வைத்தது அல்ல. இப்போது யாரோ வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த டெஸ்க் மட்டும் மாறவே இல்லை. இதே இடத்தில் தான் எனது சிறிய கணினியை வைத்துக்கொண்டு இரண்டே வாரங்களில் ஃபேஸ்புக்கின் கோடிங்கை எழுதி முடித்தேன்.
இதில் மூன்று பேர் தங்கியிருந்தோம். அதில் ஒருவர் ஃபேஸ்புக்கின் துணை நிறுவனராக ஜஸ்டின். அவர் நிறைய கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றவர். தற்போது அசானா எனும் தனது சொந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். இன்னொருவர் கிறிஸ். இவர் ஒரு ஸ்மார்ட்டான  நபர். கனெக்ட் எனும் ஃபேஸ்புக் மந்திரத்துக்கு சரியான நபர் இவர் தான். க்றிஸ் தற்போது ஃபேஸ்புக்கின் ப்ராடக்ட் மேனேஜராக உள்ளார்.
அடுத்து நாம் இருப்பது ஒரு குறுகலான அறை. இந்த அளவு ஒரு கர்ப்பமான பெண் செல்லும் அளவுக்கு தான் இருக்கும். இந்த சுவரில் தான் எங்களுக்கு தோன்றிய விஷயங்களை எழுதி வைப்போம்” என்கிறார் மார்க்.
அதன்பின் தற்போது அங்கு தங்கியிருக்கும் மாணவர்களுடன் உரையாடினார் மார்க். அதன்பின் பேசிய பிரிசில்லா தனது ஹார்வர்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். 
தான் தொடர்ச்சியாக கோடிங் (Coding) எழுதிக் கொண்டிருந்ததையும், பக்கத்தில் இருந்த ஷவரில் இருந்து வெளியேறிய நீராவியின் சூடு எல்லாம் சேர்ந்து கணினி ரிப்பேர் ஆனதையும் நினைவு கூர்ந்த மார்க், இதனால் தான் டேட்டா சென்டர்களை குளுமையான இடத்தில் மைனஸ் 30 டிகிரியில் அமைத்தேன் என்றார். ”இங்கு வந்தது அளவில்லாத மகிழ்ச்சியைத் தருகிறது” என்று வைவ்வை முடிக்கிறார் மார்க். இந்த வீடியோவை 12 மணிநேரத்தில் 53 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதற்கு முன்பு பதிவிட்ட புகைப்படத்தை 1.5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் தட்டிய தனி ஒருவன் ஸ்டில்லும் செம.

'தலைவர் 161'... மே 28-ல் ஆரம்பம்! #Thalaivar161 #Bheemji

Rajini - Ranjith film to start on May 28thஇந்தப் படம் மும்பையை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. படத்தை வரும் மே 28-ம் தேதி தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்தப் படத்துக்காக சென்னை அருகில் பிரமாண்ட செட்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

- tamilbeat

பட வாய்ப்புகள் இல்லை... போடு 'பிட்'டை... அரை நிர்வாண படங்களை வெளியிட்ட பிரபல நடிகை! #gossip #Riyasen


Image result for ரியாசென் topless
ரியாசென் என்ற நடிகையை நினைவிருக்கிறதா... தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மகால் படத்தில் நடித்தவர். பிரசாந்துக்கு ஜோடியாக குட்லக் படத்தில் நடித்தார். அப்புறம் முழமையாக பாலிவுட்டிலேயே செட்டிலாகிவிட்டார்.
ரொம்ப காலமாக நடித்துக் கொண்டிருக்கும் ரியா சென்னுக்கு இப்போது, அங்கே பெரிதாக வாய்ப்புகள் இல்லை.
உடனே வழக்கமான, ஆனால் கைமேல் பலன் கொடுக்கும் ஒரு காரியத்தைச் செய்துள்ளார். தனது அழைகையும் கவர்ச்சியையும் வெளிப்படுத்துவது போல, கிட்டத்தட்ட அரை நிர்வாணப் படங்களை எடுத்து சமூக வலைத் தளங்களில் பரப்பியுள்ளார்.
வலைத் தளவாசிகளும் ஆர்வத்துடன் இந்தப் படங்களைப் பார்த்துப் பரவசமாகி, பகிர்ந்து வருகின்றனர்.
ரியாசென் எதிர்ப்பார்த்தது நடந்துவிட்டது. பல பிரபலங்களின் பார்வைக்கும் இந்த கவர்ச்சிப் படங்கள் சென்றுவிட்டன. வாய்ப்புகள் கதவைத் தட்டக்கூடும்!

அவன் மட்டும் இருக்கக் கூடாது... ஆர்டர் போடும் பரோட்டா! #kisukisu #tamilcinema

Image result for gossip word

பெயரிலேயே யோகத்தை வைத்திருக்கும் காமெடியனால் நடிகருக்கு பட வாய்ப்புகள் குறைகின்றனவாம். 'அந்த பையனை பார்த்தாலே வித்தியாசமாக சிரிக்கும் வகையில் இருக்கிறார்' என்று அந்த பக்கம் போகிறார்கள் தயாரிப்பாளர்கள். யோகப் பையனும் பந்தா காட்டாமல் புரொட்யூசர் ப்ரண்ட்லியாக இருக்கிறாராம். இதைக் கேள்விப்பட்ட காமெடியன் நான் நடிக்கற படங்கள்ல அந்த பையன் இருக்கக் கூடாது என்று ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போடுகிறாராம். அவரும் இல்லன்னா எப்படிண்ணே சிரிப்பாங்க...

Courtesy: filmibeat

போயஸ் கார்டனை கதிகலக்கும் ‘நள்ளிரவு அலறல்’! - கலக்கத்தில் #மன்னார்குடி மக்கள் #VikatanExclusive

ஜெயலலிதா உடல்
முன்குறிப்பு: இந்த செய்திக் கட்டுரை பல பரிசீலனைக்குப் பிறகே பதிவேற்றப்பட்டிருக்கிறது. செய்தியைப் படித்ததும் உங்கள் மனதில் தோன்றும் சந்தேகங்கள் எங்களுக்கும் தோன்றுகிறது. இருப்பினும், நடந்த தகவல்களை ஊர்ஜிதப்படுத்திய பின்னரே, இந்தச் செய்தியைப் பதிகிறோம். இக்கட்டுரை தொடர்பான தங்கள் கருத்துக்களை, கமெண்ட் பாக்ஸில் பதியலாம்!
கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை முயற்சியும் அடுத்தடுத்து நடக்கும் உயிர்ப் பலிகளும் ஆளும்கட்சியினர் மத்தியில் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. ‘ஜெயலலிதா தொடர்பான விஷயங்களில் தலையிடுகின்றவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். போயஸ் கார்டனில் நள்ளிரவு கேட்கும் அலறல்களால் அங்குள்ளவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்' என்கின்றனர் மன்னார்குடி குடும்ப உறவுகள். 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து 150 நாள்கள் ஆகிவிட்டன. அவரது மரணம் தொடர்பான மர்மம் இன்னும் விலகவில்லை. அதற்குள் அண்ணா தி.மு.க மூன்று துண்டுகளாக சிதறிவிட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கிறார் சசிகலா. லஞ்சப் புகாரில் திகார் சிறையில் அடைபட்டிருக்கிறார் தினகரன். கூடவே, கொடநாடு எஸ்டேட் கொலை மர்மம் என தினம்தினம் திகில் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 'தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது?' என்றே தெரியாமல் நாள்களைக் கடத்தி வருகின்றனர் போயஸ் கார்டன் ஊழியர்கள். "ஜெயலலிதா சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தலையை நீட்டியவர்கள் யாரும் நல்லபடியாக வாழவில்லை. கார்டனைப் பொறுத்தவரையில், 'ஆண்களுக்கு ராசியில்லாத வீடு' என்று சொல்வார்கள். ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் யார் வந்து தங்கினாலும், அந்த இரவு அவர்கள் நிம்மதியாக இருந்ததில்லை. கடந்த சில நாள்களாக ஏதேதோ சத்தம் கேட்கிறது. அதுவும் அலறல் தொனியில் இருக்கிறது!" எனக் குழப்பத்தோடு விளக்க ஆரம்பித்தார் கார்டன் ஊழியர் ஒருவர். தொடர்ந்து நம்மிடம் பேசியவர், "ஜெயலலிதாவுக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். 17 ஆதரவற்ற குழந்தைகள் கார்டனில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா சாப்பிட அமரும்போதெல்லாம், இதில் ஏதாவது ஒரு குழந்தை அருகில் இருக்க வேண்டும். சில நேரங்களில் அந்தக் குழந்தைக்கு அவர் ஊட்டிவிடுவார். உற்சாகமாக இருக்கும்போது, குழந்தைகளுக்குப் பரிசுப் பொருள் வாங்கிக் கொடுப்பார். இவர்களை கவனிக்க ராஜம்மாள் என்ற 75 வயது பணிப்பெண் இருக்கிறார். சென்னையைச் சேர்ந்த இவர், சந்தியா காலத்தில் இருந்து வேலையில் இருக்கிறார்.
போயஸ் கார்டன்
ஜெயலலிதா இறந்த பிறகு, சசிகலாவும் சிறைக்குச் சென்றுவிட்டார். அதன்பிறகு, துணைப் பொதுச் செயலாளராக பதவியேற்றார் டி.டி.வி.தினகரன். பதவிக்கு வந்த நாளில் இருந்து தொடர்ச்சியாக நான்கு நாள்கள் போயஸ் கார்டனில் தங்கியிருந்தார். அந்த நாள்களும் ஏதேதோ சத்தம் கேட்டிருக்கிறது. இந்த சத்தத்தால் பயந்து போன அந்த 17 குழந்தைகளும், ஒரே அறைக்குள் வந்து சுருண்டு படுத்துவிட்டனர். தினகரனை நிம்மதியாகத் தூங்கவிடாமல் அலறல் சத்தம் அதிகமாகியுள்ளது. மறுநாள் மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவர் வெளியேறிவிட்டார். ஒருநாள் திவாகரன் சம்பந்தப்பட்டவர் வந்து இரண்டு நாள்கள் தங்கியிருக்கிறார். ஜெயலலிதா அறையில் அமர்ந்து அவர் பஞ்சாயத்து பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். அன்று இரவு வழக்கத்துக்கு மாறாக அலறல் போல சத்தம் கேட்டுள்ளது. தற்போது கார்டனில் ஆண்கள் யாரும் இல்லை. குழந்தைகள் மிகவும் பயந்து போய் உள்ளனர்.
ஐந்து நாள்களுக்கு முன்பு தி.நகரில் உள்ள இளவரசி மகன் விவேக் வீட்டுக்கு, கார்டனில் இருக்கும் நான்கு குழந்தைகளின் பாதுகாவலர்கள் வந்துள்ளனர். 'குழந்தைகள் ரொம்பவும் பயந்து போய் உள்ளனர். சிறையில் இருக்கும் சின்னம்மாவுக்கும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். துணைக்கு யாரும் இல்லாததால், நாங்கள் கூட்டிச் செல்கிறோம்' எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். இதனைக் கேட்டு கவலையடைந்த விவேக், அன்று இரவு கார்டனில் வந்து தங்கினார். அன்று எந்த சத்தமும் கேட்கவில்லை. மறுநாள் அவரிடம் பேசிய குடும்ப உறுப்பினர்கள், 'நீ கார்டனில் தங்கிவிடு' எனச் சொல்ல, அவரது மனைவியோ, 'தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அங்கு தங்கியவர்களுக்கு சிக்கல் மேல் சிக்கல் வருகிறது. உங்களுக்கு ஏதேனும் பிரச்னை வந்துவிடப் போகிறது' எனச் சொல்ல, 'நான் நான்கு மாதங்களுக்கு மேல் அங்கு தங்கியிருக்கிறேன். ஒன்றும் பிரச்னை இல்லை. ஜெயா டி.வி, ஜாஸ் சினிமாஸ் நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டியிருப்பதால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் கார்டன் போகிறேன்' என சமாதானப்படுத்தியிருக்கிறார். விரைவில் போயஸ் கார்டன் வீட்டில் குடியேறவும் திட்டமிட்டிருக்கிறார் விவேக்" என்றார் விரிவாக. 
"போயஸ் கார்டனில்தான் அலறல் சத்தம் கேட்கிறது என்றால், ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்புக்கு நிற்கும் காவலர்களும் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். அந்த சமாதியின் அருகில் போலீஸ்காரர்களால் நிற்க முடியவில்லை. அந்தளவுக்கு அனல் காற்று வீசுகிறது. இதுவரையில் 20 பேரை ஷிப்ட் முறையில் மாற்றிவிட்டார்கள். ஆவடி பட்டாலியனில் இருந்தும் பாதுகாப்புக்குப் போலீஸார் வருகின்றனர். தினமும் யாராவது ஒருவர் காய்ச்சலால் அவதிப்படுகிறார். இத்தனைக்கும் பீச்சுக்குப் பக்கத்தில்தான் இருக்கிறார்கள். 'இந்தளவுக்கு ஏன் அனல் காற்று வீசுகிறது?' என சந்தேகத்தோடு பார்க்கிறார்கள். இதுகுறித்து டி.ஜி.பி அலுவலகத்தில் தனி மீட்டிங்கே போட்டுவிட்டார்கள். யாராலும் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. ஒன்றை மட்டும் தெளிவாக உணர முடிகிறது. ஜெயலலிதா பயன்படுத்திய பொருளில் இருந்து அவர் தொடர்பான விஷயத்தில் தலையிடுகின்றவர்கள் எல்லாம் ஏதேனும் ஒரு சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள்!’’ என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

கப்பல் மூலம்பணம் கடத்தல்தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள, சசிகலா அக்கா மகன் தினகரனை, டில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்க, சிறப்பு கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. 

தினகரன், கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு பணம் கடத்தியதும் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ள போலீசார், அவரது வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளனர். மேலும், டில்லியில் போலீசார் நடத்திய விசாரணையின் போது, ஹவாலா ஏஜன்ட் மூலம் பணப் பரிமாற்றம் செய்ததை, அவர் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.
அம்பலமானது


அ.தி.மு.க., பிளவுபட்டுள்ள நிலையில், முடக்கி வைக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, சசிகலா அக்கா மகன் தினகரன், 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயற்சித்தது அம்பலமானது. 
பெங்களூரைச் சேர்ந்த, இடைத்தரகர் சுகேஷ் சந்தர் என்பவன், 1.3 கோடி ரூபாயுடன், டில்லியில் பிடிபட்டதன் மூலம், இது தெரிய வந்தது. அதை தொடர்ந்து, தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோரிடம், போலீசார் விசாரணை நடத்தினர்.

நான்கு நாட்கள் நடத்திய விசாரணைக்குப் பின், ஏப்., 26ல், தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோர்ட் அனுமதியுடன், டில்லி போலீசார், அவர்களை காவலில் எடுத்து, ஐந்து நாட்களாக விசாரித்தனர். 
ஆஜர்படுத்தினர் 
இதற்கிடையில், தினகரனுக்கு பணத்தை மாற்றுவதற்கு உதவியதாக, டில்லியைச் சேர்ந்த, பிரபல ஹவாலா ஏஜன்ட் நரேஷ் ஜெயின் கைதுசெய்யப்பட்டான்.இந்நிலையில், தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோரின் போலீஸ் காவல் முடிந்ததைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில், போலீசார் நேற்று, அவர்களை ஆஜர்படுத்தினர். 
வழக்கின் விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளதால், கூடுதல் தகவல்களை சேகரிக்க, தினகரனை, மேலும் சில நாட்களுக்கு, தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என, டில்லி போலீசார் கோரினர்.அதை ஏற்க மறுத்த, சிறப்பு கோர்ட் நீதிபதி பூனம் சவுத்ரி, தினகரனை, மே, 15 வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். 
அதை தொடர்ந்து, நேற்று மாலை, தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர், திகார் சிறையில் அடைக்க ப்பட்டனர்.போலீசாரின் வேண்டுகோளை ஏற்று, பாதுகாப்பு காரணங்களுக்காக, தினகரனை அடுத்த முறை, திகார் சிறையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆஜர்படுத்த, கோர்ட் அனுமதி அளித்தது. 
கப்பல் மூலம்பணம் கடத்தல் 
தினகரன் மீதான வழக்கு விசாரணைகுறித்து, டில்லி போலீஸ் வட்டாரங்கள்tகூறியதாவது: தினகரன், 1991 - 98 வரை, இந்தியாவில் இல்லை; வெளிநாட்டு பிரஜையாகவே வாழ்ந்து வந்தார். தற்போதும், அவரது, 'நெட்வொர்க்' முழுவதும் வெளிநாடுகளை மையப்படுத்தியே உள்ளது. மல்லிகார்ஜுனா உதவியுடன் அவர், கடல் மார்க்கமாக, பல கோடி ரூபாயை, கன்டெய்னர்களில் வெளிநாட்டிற்கு கடத்தியதாக, ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அது பற்றியும் விசாரிக்கப்படுகிறது.ஐந்து நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஹவாலா ஏஜன்ட் மூலம், இடைத்தரகர் சுகேஷ் சந்தருக்கு பணம் தந்ததை, தினகரன் ஒப்புக் கொண்டுள்ளார்.சென்னையில் உள்ள அவரது, ஐந்து வங்கிக் கணக்குகளில் இருந்து, பல கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, அந்த வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பீதியில் மன்னார்குடி குடும்பம்

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில், தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஒவ்வொருவராக சிறைக்கு செல்வதால், அடுத்து என்ன நடக்குமோ என, மன்னார்குடி குடும்பம் பீதியில் உள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -
dinamalar

சேலம், கோவையில் ஆடம்பர நகைகள் விற்பனை? - கோடநாடு எஸ்டேட்டில் திருடியதா என சந்தேகம்


சேலம், கோவையில் ஆடம்பர நகைகளை சிலர் விற்றுள்ளனர்; அவை, கோடநாடு எஸ்டேட்டில் திருடியதா என, சந்தேகம் எழுந்துள்ளதால், உளவுப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம், ஆத்துார், கோவை, சென்னை உட்பட சில பகுதிகளில் உள்ள நகைக்கடை, நகை அடகு கடை மற்றும் நகை அடமானம் பெறும் தனியார் நிதி நிறுவனங்களில், பணக்கார குடும்பத்தினர் பயன்படுத்தும் ஆடம்பர நகைகளை, ஜனவரி, பிப்ரவரியில், குறைந்த விலைக்கு சிலர் விற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அவற்றை, சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள், உறவினர்கள், நெருக்கமான வாடிக்கையாளர்களுக்கு விற்றதாக கூறப்படுகிறது.மார்ச்சில், ஆத்துார் நகரில் உள்ள நகை மற்றும் அடகு கடைகள், சேலத்தில் உள்ள சில கடைகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.'விற்பனைக்கு முந்தைய இருப்பு, விற்ற தங்க அளவில் இருந்த வித்தியாசத்தால், சோதனை நடந்தது' என, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், சேலம் மாவட்டத்தில், பழைய நகைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா, நகை அணியாமல் இருந்தாலும், நகை பிரியர் என்றும், கோடநாடு எஸ்டேட்டுக்கு வரும் போது, புது நகைகளை அணிந்து பார்ப்பார் எனவும் கூறப்படுகிறது.

அதனால், அதிக அளவிலான நகைகள், அங்கிருந்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின், எஸ்டேட்டில் போலீசார் பாதுகாப்பு இல்லாததால், வடமாநிலங்களை சேர்ந்தவர்கள், பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர்.இதனால், அங்கு ஏற்கனவே பணிபுரிந்த சிலர், அவ்வப்போது நகை, பணத்தை கொள்ளை அடித்ததாக தெரிகிறது. 3,000 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும், அவற்றை சிலர், நகை கடைகளில் விற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.எஸ்டேட்டில், ஜெயலலிதா, சசிகலா அறையில் இருந்த ஏராளமான நகைகள் திருட்டு போனதாக தகவல் வெளியானதால், சேலம், கோவை, சென்னை ஆகிய பகுதிகளில், உளவுப்பிரிவு போலீசார், ரகசிய விசாரணை நடத்துகின்றனர்.காவலாளி கொலை வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றினால், ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகை திருட்டு புகார் குறித்த தகவல் வெளியாகும். மேலும், கோடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பான மர்ம முடிச்சுகள் அவிழும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது நிருபர் -
dinamalar